Demanding the re-implementation of the existing three laws, the lawyers have announced a series of protests from tomorrow!
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழுவின் அவசர கூட்டம், அச்சங் தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் நடைபெற்றது. அதில்,
முப்பெரும் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹிந்தி, சமஸ்கிருத சட்ட திருத்தங்களை வாபஸ் பெற்று, ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி முப்பெரும் சட்டங்களை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டி பலமுறை வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தும், வழக்கறிஞர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றபடவில்லை. எனவே, முப்பெரும் சட்டங்களை ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி நடைமுறைபடுத்த வேண்டி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும் பொருட்டு 15-07-2024 திங்கள் கிழமை முதல் 30-07-2024 செவ்வாய் கிழமை வரை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளிலிருந்தும் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் விலகியிருப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் சேகர், பொருளாளர் சிவராமன், உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்
இந்தத் தொடர் போராட்டம் வழக்காடிகளையும், நீதிமன்ற பணிகளையும், வெகுவாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.