Demonstration against petrol, diesel and cooking gas price hike, Perambalur Communist Party resolution!
பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விலையை உயர்த்தி, வேலையின்மை மற்றும் வெறுப்பு அரசியலை வளர்த்து வருகின்ற மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டி த்து வரும் மே 26ம் தேதிகண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என, பெரம்பலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான கூட்டு இயக்கத்திற்கான ஆலோசனை கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய பிரிவு மாநில செயலாளர் வீரசெங்கோலன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, கலையரசி, மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு பொருட் கள் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வு களை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும்,
வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 வழங்க வேண்டும், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும், வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும், நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வர வேண்டும், வேலையில்லா கால நிவாரணம் அளிப்பதற் கான மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,
அரசுத்துறையில் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 26ம் தேதி அன்று புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டு ஆதரவு அளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.