Deputy Chief Minister Udayanidhi Stalin’s visit to Perambalur; Study with the collector officers about the progress work!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்திற்கு 22.10.2024 அன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
இக்கூட்டத்தில் முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து வட்டம் வாரியாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. வருவாய்த் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பல்வேறு முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், இதுவரை வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பட்டா மாற்ற ஆணைகள், இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சான்றுகள் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மூலம்”கலைஞரின் கனவு இல்லம்” திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகள், பணிகள் முடிக்கப்பட்ட வீடுகள் குறித்த தகவல்கள், பிற திட்டங்கள் மூலம் கட்டப்படும் வீடுகளின் பணி முன்னேற்றம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள விபரம் குறித்தும் கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் அனைத்துத்துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.