Discussion emphasized the pharmacist to fill vacant posts in the demonstration in Namakkal

நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரி முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முரளி, இணைச் செயலாளர் சாலை சுப்ரமணியம், அமைப்புச் செயலாளர் கோபி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் அன்பழகன் வரவேற்றார்.

இந்த ஆர்பாட்டத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 40 ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

32 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு இல்லாத நிலையை போக்கும் வகையில் கூடுதல் பதவி உயர்வு பணியிடங்களை உருவாக்க வேண்டும்.மேலும் 42 துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் தலைமை மருந்தாளுநர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.

385 வட்டார ஆஸ்பத்திரிகளில், மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். புற ஓய்வூதிய திட்டம், புற ஆதார முறை பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் சேகர், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!