Drunk man lying in the middle of the main road in Perambalur: Motorists removed!
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் இருந்து துறைமங்களம் செல்லும் சர்வீஸ் ரோட்டில் இன்று அதிகாலை 1 மணியளவில், கட்டிட வேலை செய்யும் சுமார் 50 வயது மதிக்க தக்க கூலித்தொழிலாளி ஒருவர் மது போதை தலைக்கேறிய நிலையில் சாலையின் நடுவே கால் மேல் கால் போட்டு துளியும் பயம் இல்லாமல் படுத்து உறங்கி கொண்டிருந்தார்.
எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் இந்த சர்வீஸ் ரோட்டில், போதை ஆசாமியின் நல்ல நேரத்தால் வாகனப்போக்கு வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் பெரியவரே ஏன் இப்படி நடுரோட்டில் படுத்து இருக்கீங்க? உச்களுக்கு ஏதாவது பிரச்சினையா? போராட்டம் ஏதும் பன்றீங்களா? ஓரமா போய் படுங்க உசுரு போய்டும்! என போதை ஆசாமிக்கு அறிவுரை கூறி அவரை அப்புறப்படுத்தினர்.