Due to the lack of a dentist in Perambalur Government Hospital, the patients are suffering because they are unable to seek treatment!

பெரம்பலூர் மாவட்ட அரசு அலுவலக தலைமை மருத்துவமனை பொது நோயாளி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவம், காசநோய், கண், காது மூக்கு தொண்டை தோல், எலும்பு, நரம்பியல், நிபுணர்கள், பிசியோதெரபி, சித்தா, ஹோமியோபதி, நேச்சுரோபதி, மனநலம், இதயம் மறறும் எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், ரத்தம் சிறுநீர் பரிசோதனைகள், என பல்வேறு பிரிவுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு சிகிச்சை பெற பெரம்பலூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொழுதூர் பகுதி மக்களும், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதி மக்களும், சேலம் மாவட்டம் வீரகனூர் பகுதி மக்களும் அதிக அளவில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் பல் டாக்டர் நிரந்தரமாக இல்லாததால் பல் சம்பந்தமான நோய்களுக்கு வருபவர்களும், விபத்தில் சிக்கி பல் சேதமடைந்தவர்களும் உரிய சிகிச்சை பெற முடியாமல் கடந்த ஓரிரு வாரங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

பல் வலியும் வயிற்று வலியும் அவரவர்களுக்கு வந்தால் தான் தெரியும் என்பது பழமொழி. மருத்துவமனையில் குழந்தைகளுக்கு மட்டும் இயங்கக்கூடிய மருத்துவப் பிரிவில் மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், வயது வந்தவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பிரிவில் மருத்துவர்கள் பணிக்கு அமர்த்தபடாததால் அங்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெறாமலேயே ஏமாற்றத்துடன் வீடு திரும்பி செல்கின்றனர்.

வசதி உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரம் கணக்கில் செலவு செய்து பற்களை சரி செய்து கொள்கின்றனர். ஆனால், ஏழை எளியவர்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் மேலும் பல் வலியோடு தொடர்ந்து அவதிப்படும் நிலை உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக மருத்துவமனையில் பல் மருத்துவர்கள் நியமனம் செய்ய சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் நோயாளிகள் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!