Employment: Childcare Employee, Assistant
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டார குழந்தை வளர்ச்சி திட்டத்தில் உள்ள 4 குழந்தைகள் காப்பகங்களில் காலியாக உள்ள குழந்தைகள் காப்பக மைய பணியாளர் மற்றும் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களில் 4 பணியாளர் மற்றும் 4 உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்திட 15.12.2016 முதல் 23.12.2016 மாலை 5.00 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் அனைத்திற்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். காலிப்பணிடங்கள் விவரம் மற்றும் இன சுழற்சி விவரங்கள் குழந்தை வளா;ச்சி திட்ட அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.
குழந்தைகள் காப்பக பணியாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 25 வயது பூர்த்தியடைந்தும், 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரா; குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். குழந்தைகள் காப்பக கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். தேர;வு செய்யப்படும் குழந்தைகள் காப்பக பணியாளருக்கு பிரதிமாதம் ரூ.3,000ஃ- மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
குழந்தைகள் காப்பக உதவியாளர் பதவிக்கு எழுதப்படிக்க தெரிந்திருத்தல் வேண்டும் (பள்ளி சான்று), பொதுப்பிரினா; மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 20 வயது பூர்த்தியடைந்தும் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் 20 வயது பூர்த்தியடைந்தும் 45 வயதுதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குழந்தைகள் காப்பக உதவியாளருக்கு பிரதி மாதம் ரூ.1,500ஃ- மட்டும் தொகுப்திபூயமாக வழங்கப்படும்.
1).ஆலத்தூர் வட்டாரத்தில் உள்ள பாடாலூர் பொன்னகர் மையத்திற்கு பொதுப்போட்டி (முன்னுரிமை பெற்றவர்).
2) பெரம்பலூர் வட்டாரத்தில் உள்ள துறைமங்கலம் மையத்திற்கு ஆதிதிராவிடார் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர்).
3). வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள வேப்பந்தட்டை மையத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை அடிப்படையில்).
4). வேப்பூர் வட்டாரத்தில் உள்ள குன்னம் மையத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம் தவிர) முன்னுரிமை பெற்றவர் ஆவார்கள்.
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பின் அதற்கான சான்றிதழ், உடல் ஊனமுற்றோராய் இருப்பின் அதற்கான சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றின் சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் பெரம்பலூர் மற்றும் தங்களுக்கு தொடர்புடைய வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் 15.12.2016 முதல் 23.12.2016 மாலை 5.00 மணிக்குள் நேரில் வந்து சேர வேண்டும்.
23.12.2016 அன்று அலுவலக நேரத்திற்குப் பிறகு கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு 4 வட்டாரங்களிலும் செயல்படும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தையோ அல்லது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை 04328 – 225803 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்க்பட்டடுள்ளது.