Engineering auditioned deposit: Anna University Order
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை நடைபெற விருந்த பொறியியல் தேர்வுகளை ஒத்தி வைத்து அண்ணா பல்கலை கழகம் உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நாடா புயல் கடலூருக்கு அருகில் டிசம்பர் 2ல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது.இத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.