Esanai and Keezhakkarai Panchayats should not be transferred from Perambalur Police to another police station! Public demand!
பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசன் இரண்டாக பிரிக்கப்பட்டு, செஞ்சேரி அருகே பெரம்பலூர் ஊரக காவல் நிலையம் நாளை முதல் செயல்பட உள்ளது. பெரம்பலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எசனை – கீழக்கரை, பாப்பாங்கரை கிராமங்களை, செஞ்சேரியில் உள்ள புதிய போலீஸ் ஸ்டேசன் சரகத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. இந்த ஸ்டேசனுக்கு மாற்றினால், எசனை, கீழக்கரை, பாப்பாங்கரையை சேர்ந்தவர்கள் பெரம்பலூருக்கு வந்து மீண்டும், மற்றொரு பஸ்சில் செஞ்சேரி செல்ல வேண்டும். இரவு நேரங்களில் சென்று வருவதும் சிரமமாகும். இதனால் காலதாமதம் ஆவதுடன், ஏழை எளிய மக்கள் சென்றுவர பெரும் அவதிப்படுவார்கள். எனவே, மீண்டும் எசனை, கீழக்கரையை பெரம்பலூர் டவுன் காவல் நிலையத்துடன் இணைத்து பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.