Farmers’ Association requests the government to conduct an inquiry into the illegal registration of deeds in the office of the Registrar of Veppanthattai in Perambalur District!
தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் வி.நீலகண்டன், மாவட்ட பொருளாளர் மணி, முன்னிலையில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
விவசாயிகளுக்கு மின்வினியோகம் செய்யும், மின்மாற்றிகள் பழுதடைந்தால், விதிப்படி 48 மணி நேரத்திற்குள் பழுது நீக்கி மின்வினியோகத்தை சீராக்க வேண்டும்,
மின்துறை தளவாட சாமான்கள் ஏற்றி செல்ல கூடுதல் வாகனங்களை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்,
2022-23ம் ஆண்டிற்கு 50 ஆயிரம் இலவச மின்இணைப்பு வழங்குவதாக அறிவித்த கோட்டாவில் சாதாரண முன்னுரிமையில் வழங்க இலக்கு ஒதுக்கீடு செய்யுவும்,
ஏரி, குளம், மற்றும் நீர் ஆதாரபாதைகளில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அரசியல் பாகுபாடின்றி அகற்ற கோரியும்,
தமிழகத்தில், மற்ற மாவட்டங்களை போல், விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை வனத்துறையினரே சுட அனுமதி வழங்க கோரியும்,
வேப்பந்தட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில், முறைகேடாக பத்திரம் பதிவு செய்வதை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும்,
சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்குவதாக அறிவித்ததை அரசாணையாக வெளியிடக் வேண்டும் என பல கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், எம்.எஸ். ராஜேந்திரன், ஆர்.சுந்தரராஜன், எஸ்.கே செல்லக்கருப்பு, ஜெயபிரகாஷ், ராஜா, ரகுபதி, துரைராஜ், ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.