Farmers can register sugarcane for the 2024-25 planting season at Perambalur Sugar Mill; Collector informs!

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 2025-26 ஆம் ஆண்டு நடவு பருவத்திற்கு, பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் இருந்து ஏற்கனவே பயிரிடப்பட்ட கரும்பினை பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து ஆலையின் அரவைக்கு அனுப்பி வைக்கலாம்.

கரும்பு உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், இயந்திர அறுவடையை ஊக்குவிக்கவும் அகலப்பார் முறையில் உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பு இரகங்களை நடவு செய்து ஆலைக்கு பதிவு செய்த விவசாயிகளுக்கு பருசீவல் நாற்றுகள், அகலப்பார் நடவு, ஒருபரு விதைக்கரணைகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, இதுவரையில் பதிவு செய்யாமல் உள்ள நடவு மற்றும் மறுதாம்பு கரும்பினை பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து கரும்பு விவசாயிகள் பயன் பெறலாம். இது குறித்த மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள கரும்பு கோட்ட அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கிரேஸ் லால்ரிண்டகி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!