Farmers petition to set up paddy procurement center in Perambalur
பெரம்பலூர் நகரில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விளாமுத்தூர், நொச்சியம் கோனேரிபாளையம் மற்றும் பெரம்பலூர் டவுன் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் அறுவடை செய்த நெல்லை, குரும்பலூர் அல்லது கீழப்புலியூர் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளது. அதுவும் ஆன்லைனில் பதிவு செய்தால் 2 மாதத்திற்கு மேலாக விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகையால், பெரம்பலூர் நகரில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரக் கோரி கலெக்டருக்கு வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் க.பூவலிங்கம் (வேளாண்மை துறை) விவசாய பிரதிநிதிகள் சார்பில் மனு கொடுத்தனர். இதில் முன்னாள் நகர கவுன்சிலர் தெ.பெ.வைத்தீஸ்வரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.