Fire Accident near Perambalur: 5 roof houses damaged, Goods worth around Rs 6 lakh Burnt !!
பெரம்பலூர் அருகே இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 5 வீடுகள் எரிந்து தீக்கிரையாகின.
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கவேல், மருதாயி, அய்யம்மாள், கணேசன், ராஜமாணிக்கம். கூரையால் வேயப்பட்ட இவர்களின் 5 பேரின் வீடுகளும், அருகருகே உள்ளது.
இன்று காலை தீடீரென ஏதோ ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தால், 5 வீடுகளும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைக்க முயற்சித்தனர்.
ஆடிக் காற்று வேகமாக வீசி வருவதால், தீ கட்டுக்குள் அடங்காமல் செல்லவே, பெரம்பலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்து மற்ற வீடுகளுக்கு தீ பராவாமல் கட்டுக்குள் கொண்டு தீயை அணைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசாரும் , வழக்குப்பதிவு செய்து தீவிபத்திற்கான காரணம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிபத்தின் சேத மதிப்பு ரூ. 6 லட்சத்திற்கு மேல் இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும், வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரமுகர்களும் பாதிக்ப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உதவிகள் செய்து வருகின்றனர்.