Former Chief Minister Karunanidhi’s 99th birthday: Cleaning work throughout Perambalur municipality; The collector began.

பெரம்பலூர் நகராட்சி முழுவதும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 பிறந்த நாளை முன்னிட்டு, மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு தூய்மைப் பணியினை கலெக்டர் வெங்கடபிரியா எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் பெரம்பலூர் நகர் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு தூய்மைப் பணியினை கலெக்டர் வெங்கடபிரியா புதிய பேருந்து நிலையத்தில், எம்.எல்.ஏ. பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் நகராட்சி பகுதி முழுவதும் இன்று ஒரு நாள் காலை முதல் மாலை வரை 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு, குப்பைகள் கையாள்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தவும், ”என் நகரம், என் பெருமை”, “என் குப்பை என் பொறுப்பு” என்ற விழிப்புணர்வு பயணத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பெருமைமிகு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியினை முழுமையான சுகாதாரமான நகராட்சியாக மாற்றுவதற்காக உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, “என் குப்பை என் பொறுப்பு” என்ற விழிப்புணர்வு வாசனங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வனத்துறையின் சார்பில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் அருகில் 1000 மரக்கன்றுகள் நடும் பணிகளை கலெக்டர் வெங்கட பிரியா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன்கள் மீனா, ராமலிங்கம், பெரம்பலூர் நகராட்சித் துணை தலைவர் ஹரிபாஸ்கர், பெரம்பலூர் நகராட்சி அரசு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!