Former minister A. Raja’s aide steals bike!
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்பியுமான ஆ ராசாவின் உதவியாளராக பெரம்பலூர் மாவட்டம் குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்த அறிவுச்செல்வன் (50). உள்ளார். பெரம்பலூர் நகரத்தில் வசித்து வருகிறார். நேற்றிரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து அறிவுச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர்களை அடையாளம் காண அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.