Four homes near the in flames perambalur
பெரம்பலூர் அருகே நான்கு கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்ததில் ரூ.4 லட்சம் மதிப்பலான பொருட்கள் எரிந்து சாம்பலானது
பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி கிராமம், கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் சாமிவேல், இளவரசன், தர்மராஜ், பெரியசாமிஅரவிந்தன் ஆகிய நான்கு பேரின் வீடுகளும் அருகருகே உள்ளது. இந்நிலையில் அனைவரும் இன்று கூலிவேலைக்கு சென்று விட்டனர். கர்ப்பிணியான பெரியசாமிஅரவிந்தனின் மனைவி முத்துலட்சுமி மட்டும் வீட்டில் இருந்தார். இந்நிலையில், மாலை 4 மணி அளவில் யாரோ வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. 4 வீடுகளும் தீக்கிரையாகின. வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்கள், துணிமணிகள், அனைத்து சமான்கள், ரேசன் கார்டு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு தீயை அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். பெரம்பலூர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.