Gandhi’s birth anniversary: k.Nandakumar garlanded his statue in honor of the county civil service employee

oct-2-collectorகாந்தியடிகளின் பிறந்த தினமான இன்று, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆண்டுதோறும் காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர; 2 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் பழையபேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

பின்னர், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் உருவப் படத்தை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.

சென்ற ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.7.79 லட்சம் மதிப்பிலான கதர் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கதர், பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதமும், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும் மற்றும் உள்ளன் ரகங்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பத்து மாத சுலப தவணைகளில் திருப்பி செலுத்தும் வகையில் கடன் முறையில விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை பொதுமக்களும், அரசு அலுவலர்களும் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான துணிவகைகள் வாங்கி பயன்பெறுவதன் மூலம் கதர் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைத்திட உதவிட வேண்டும்.

இந்நிகழச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், நகராட்சி ஆணையர் முரளி, பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சுதாகர், காதிகிராப்ட் விற்பனை மேலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!