Ganesha statue in tree removal near in Perambalur authorities: strong opposition from the public
பெரம்பலூர் அருகே மரத்தடியில் இருந்த விநாயகர் சிலை அகற்றுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் அருகே உள்ள மரவநத்தம் கிராமத்தில் அரசமரத்தடியில் கடந்த ஆக.28 ம் தேதியன்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாட்டு வந்தனர்.
இந்நிலையில், அய்யம்பெருமாள் என்பவர் பொதுமக்கள், அரசமரத்தடியில் அனுமதி பெறாமல் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருவதாக கூறி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் நேற்று மரவநத்தம் கிராமத்திற்கு ஆர்.டி.ஓ பேபி, தாசில்தார் மனோன்மணி பி.டி.ஓ ஆலயமணி, மங்களமேடு சரக டி.எஸ்பி ஜவஹர் லால் தலையிலான வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரமரத்தடியில் இருந்த விநாயகர் சிலையை அகற்றி வி.களத்தூர் சிவன் கோவிலில் வைத்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் வழிப்பாட்டு உரிமையை பறிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.