Girl abducted for Married near Namakkal: Youth 10 years in prison
நாமக்கல் அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சிறுபூலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் வீரமணி (27). இவர் கடந்த 2016 ம் ஆண்டு மே மாதம் 20 ம் தேதி திருச்செங்கோடு அருகே ஒ.ராஜாபாளையத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நீதிபதி இளங்கோ முன்னிலையில் நடைபெற்றது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் குற்றம்சாட்டப்பட்ட வீரமணிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.