Gokula Makal Katchi Zonal Executive Meeting: To be held tomorrow at Perambalur; State Secretary N. Muthiah interview!
கோகுல மக்கள் கட்சியின் மாநில செயலாளர் என்.முத்தையா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
கோ.ம.கட்சியின் மண்டல அளவிலான பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிராம நிர்வாகிகள் அறிமுக கூட்டம், பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகே உள்ள முத்துக்கோனார் திருமண மண்டபத்தில், பெரம்பலூர் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரம் தலைமையில் நடக்கிறது. கருப்பையா, ராமராஜ், மற்றும் பெரம்பலூர் நகர அவைத்தலைவர் ராம்ராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகிக்கின்றனர்.
வெளிமாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். கட்சி நிறுவனரும், மாநிலத் தலைவருமான எம்.வி. சேகர் ஏற்புரை ஆற்றவும், மாநில செயலாளர் என்.முத்தையா (தான்) விளக்க உரை ஆற்றஉள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதால், கட்சியினர் மற்றும் யாதவர், கோனார், ஆயர் சமூகத்தை சேர்ந்த மற்றும் தோழமை சமூகத்தினர் திரளாக கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.