Golden Gates student has chosen to contest In Perambalur a national level basket-ball
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மாணவி ஒருவர் கரூரில் நடந்த தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தேர்வு நடந்தது . இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 54 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில 17 வயதுக்கு உட்பட்டோர் போட்டி பிரிவில் கோல்டன் கேட்ஸ் மாணவி அ.திரிஷா தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இந்த போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ளது.
இப்போட்டிக்கு தேர்வான மாணவி அ.திரிஷாவை பள்ளி தாளாளா ஆர்.ரவிச்சந்திரன், பள்ளியின் முதல்வர் ஆர்.அங்கையற்கன்னி, விளையாட்டு பயிற்சியாளர்கள் பிரேம்நாத், அகிலாதேவி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.