Goonda act on the recommendation to prison on two collector brackets: in Perambalur police action

bad_criminal_arrest_shackle_handcuff_

கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள பெரம்பலூர் கலெக்டர் நந்தகுமார் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (எ) அப்துல்ரஹ்மான் (தமிழ்தேசம் என்ற திரைப்பட இயக்குனர்) மற்றும் ஆலம்பாடி சாலை பகுதியை சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவரும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் செல்வராஜ்(எ)அப்துல்ரஹ்மான் மற்றும் பாஸ்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்ப லூர் மாவட்ட எஸ்.பி.,சோனல்சந்திரா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையின் பேரில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் செல்வராஜ்(எ) அப்துல்ரஹ்மான் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அதற்கான உத்தரவு நகலை பெரம்பலூர் போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 15 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழும், 3 பேர் மீது மது விலக்கு சட்டத்தின் கீழும் என மொத்தம் 18 பேர் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!