Government of Tamil Nadu announces Ambedkar’s birthday as Equality Day! Pledge accepted at Perambalur Collector’s Office !!

அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை “சமத்துவ நாளாக” கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் “சமத்துவ நாள் உறுதிமொழி” இன்று எடுத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 13.04.2022 முதலமைச்சர், வடக்கே உதித்த சூரியன், மலர் பூக்க வந்த பகலவன், நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாளை ‘சமத்துவ நாள்” கொண்டாடுவது என்று தமிழ்நாடு முடிவெடுத்துள்ளது என சட்டமன்ற விதி எண்.110-ன் கீழ் அறிவித்தார்கள்.

இந்த சமத்து நாள் உறுதிமொழியாக “சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி ஏற்கிறேன்”; என பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா உறுதிமொழியினை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் அதனை பின்பற்றி இந்த சமத்துவ நாள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ம.பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!