Govt. Employees who ignored public demands: MLA who came out to defend the promise
எம்எல்ஏ பல முறை பொதுமக்களின் கோரிக்கையை விடுத்தும், ஊரக வளர்ச்சி வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதால், பெரம்பலூர் அருகே எம்.எல்.ஏ சொந்த செலவில் நேரில் களமிறங்கி மின்பாதைகளை சீரமைத்தார். அதனால் தற்போது குன்னம் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளும், அதிமுக கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும், குன்னம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர் ஆர்.டி.இராமச்சந்திரன், இவரிடம், அவரின் தொகுதிக்கு உட்பட்ட , பெரியம்மாபாளையம் கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு, இரவு நேரங்களில் கிராமமே இருளில் மூழ்கிக் கிடப்பதுடன், கொசு மற்றும் புழுக்கத்தினால், குழந்தைகளுடன், அவதிப்பட்டு வந்துள்ளனர்.
அக்கிராமத்திற்கு அருகிலுள்ள கூத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வரும் பாதையில் மூங்கில்பாடி அருகே வானுயர அடர்ந்து காணப்பட்ட கருவேலம் உள்ளிட்ட மரங்கள் மின்கம்பிகளில் உரசி வந்ததால், அடிக்கடி மின் இணைப்பு துண்டாவதைத கண்டறிந்தனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட கூத்தூர் துணைமின் நிலையத்தில் பொதுமக்கள் புகாருக்குமேல் புகார் அளித்தும் பலனில்லை, மின்வெட்டு பிரச்சனைனயை எம்எல்ஏவிடம் தெரவித்தால் சரி செய்துவிடுவார் என நினைத்த பொது மக்கள் குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. இராமச்சந்திரனிடம் புகார் மனு அளித்தனர்.
அவரும் கூத்தூர் துணைமின் நிலையத்திற்குப் பேசிய போது, மூங்கில்பாடி பகுதியிலுள்ள மரங்களால்தான் பிரச்சனை, அதனை வட்டார வளர்ச்சித்துறை சரிசெய்தால் மின்வெட்டு இருக்காது என தெரிவித்துள்ளனர். மேலும், அரியலூர் மாவட்ட மின்வாரியத்தின் கீழ் கூத்தூர் துணைமின் நிலையம் இருப்பதால், ஆட்கள் பற்றாக்குறையால் எங்களால் மரங்களை வெட்டித்தர முடியாதென ஒதுங்கிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து குன்னம் எம்எல்ஏ ஆர்.டி.இராமச்சந்திரன் சம்மந்தப்பட்ட வேப்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், மோகன் ஆகியோரிடம் மூங்கில்பாடி சாலையில் மின்கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றித்தர கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை 10நாட்கக்கும் மேலாகியும் அதிகாரிகள் யாரும் செய்துதர முன்வரவில்லை. பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காததால் பெரியம்மாபாளையம் கிராமப் பொதுமக்கள் எம்எல்ஏவிடம் மீண்டும் முறையிட்டு கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதை அறிந்த எம்எல்ஏ ஆர்.டி. இராமச்சந்திரன், தனது சொந்த செலவில் ஜேசிபி எந்திரங்களை வரவழைத்து, கூலியாட்கள் உதவிகளுடன் மூங்கில்பாடி – பெரியம்மாபாளையம் சாலையிலுள்ள உள்ள முள்மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார்.
அதோடு எலக்ட்ரீஷியனைக் கொண்டு மீண்டும், மின்வெட்டு ஏற்படாதபடிக்கு மின்பாதையும் சரிசெய்யப் பட்டது.
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற எம்.எல்.ஏ மின்பாதையை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டது பெரியம்மாப்பாளையம் கிராமாத்தினரை பெரிதும் நெகிழச் செய்துள்ளது.
இதுகுறித்து எம்எல்ஏவிடம் கேட்டபோது, வேப்பூர் வட்டார வளர்ச்சித்து றை அலுவலர் மெத்தனமாக இருந்ததால் மக்களின் அத்தியாவசியப் பிரச்சனை என்ப தால் நானே களமிறங்கி செய்து முடித்தேன்.
விரைவில் அரியலூர் மாவட்ட மின்சார வாரியக் கட்டுப்பாட்டிலுள்ள கூத்தூர் துணைமின் நிலையத்தை பெரம்பலூர் மாவட்ட மின்சார வாரியக் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பொதுமக்களின் கோரிக்கையை அதிகாரிகள் அலட்சியப்டுத்தியை எம்.எல்.ஏ தனது சொந்த செலவில் தீர்த்து வைத்த இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தியதுடன் அரசு அதிகாரிகள் உண்மையான முகம் பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது.