Grama Shaba Council Meeting in All Panchayats: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து, அதன் ஒரு பகுதியாக 24.04.2022 அன்று நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து கிராம சபைக் கூட்டம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினமான 24.04.2022 அன்று காலை 11.00 மணியளவில், கிராம சபைக் கூட்டம் நடத்திடவும், இக்கிராம சபைக் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த 12 கூட்டப் பொருட்கள் மற்றும் 9 இலக்குகள் பற்றி விவாதிக்கவும், கூட்டப் பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிடவும், உறுதிமொழி எடுத்திடவும், மேலும், கிராம சபைக் கூட்டம் நடத்திடவும், அதுதொடர்பான அனைத்து விவரங்களையும் மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் (meetingonline.gov.in) உள்ளீடு செய்திடவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24.04.2022 அன்று கிராம சபை கூட்டத்தினை நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்திடவும், கிராம சபை நெறிமுறைகளை பின்பற்றவும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்)-களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.