Group 3, Group 4 apply to vaccant : TNPSC Notice

jobs இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்க ப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை-3ல் 29 காலிப் பணியிடங்கள் மற்றும் செயல் அலுவலர் நிலை-4ல் 49 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செயல் அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் (முதல் தாள்) மற்றும் பிற்பகலில் (இரண்டாம் தாள்) தேர்வு நடைபெறுகிறது.

செயல் அலுவலர் நிலை 4 பணியிடங்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் (முதல் தாள்) மற்றும் பிற்பகலில் (இரண்டாம் தாள்) தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 24-ம் தேதி ஆகும். வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணத்தை டிசம்பர் 27-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.

இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித்தனியாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.தேர்வு மற்றும் விண்ணப்தாரர்களுக்கான தகுதிகள் குறித்த மேலும் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!