Hidden hindrance to the public bus stops only plea raised by the municipality demolished a wall meant to cast wall
பொதுமக்களுக்கு இடையூறாக பேருந்து நிறுத்தத்தை மறைத்து பெரம்பலூர் நகராட்சி எழுப்பிய மதில் சுவரை திமுகவினர் திரண்டு வந்து இடித்து தள்ளியதால் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது
பெரம்பலூர் பழைய நகராட்சி கட்டிட அலுவலகத்திற்கு அருகே உள்ள தெப்பக்குளத்தை சுற்றிலும் தற்போது அரசு சார்பில் மதில் சுவர் எழுப்பட்டு வருகிறது. அந்த மதில் சுவர் அருகே துறையூர், நாமக்கல், செட்டிக்குளம் செல்லும் பகுதிமக்கள் அங்கிருக்கும் பேருந்து நிறுத்தில் இருந்து பேருந்துகளுக்கு ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில், பல முறை திமுகவினர் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்து, பேருந்து நிறுத்தத்தை மறைத்து அங்கே மதில் சுவரை எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், தொடர்ந்து சுவர் எழுப்பபட்டு வந்ததால், ஆத்திரமடைந்த திமுகவினர் இன்று துறையூர் பெரம்பலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன் அங்கிருந்து மதில் சுவரை உடைத்து எறிந்தனர். இதனால், பெரம்பலூர் பழைய நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது. அப்போது மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ம.ராஜ்குமார், நகர செயலாளர் ம.பிரபாகரன், உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.