Hindu Revolt Conference: 10 thousand participants for the Namakkal Andal devotees council

நாமக்கல்லில் வரும் 14ம் தேதி இந்து தன் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

நாமக்கலில் ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நாமக்கல் – சேலம் ரோடு பொம்மை குட்டை மேடு லட்சுமி திருமண மண்டபத்தில் இந்து தன் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

இதில் இந்து மதம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்புகளில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், சேவா இன்டர்நேஷனல் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், துறவி ரமண பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேச உள்ளனர்.

நிகழ்ச்சியில் நாமக்கல் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பேசுகின்றனர்.

விழாவில் முன்பதிவு செய்துள்ள 6 ஆயிரம் பேருக்கு சாளக்கிராமம், துளசி செடி, பழனி விபூதி, மீனாட்சியம்மன் குங்குமம், மஞ்சள் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு 6 ஆயிரம் சாளகிராமம் வைக்கப்பட்டுள்ள ரதம் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு நாமக்கல் சாளகிராம மலையை சுற்றிவந்து ஸ்ரீ நரசிம்மர் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு பின்பு லட்சுமி திருமண மண்டபத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த ஆன்மீக விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று ஆண்டாள் பக்தர்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!