#In criminal cases, the police seized vehicles auctions

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனகங்களுக்கான பொது ஏலம் 26.12.2016 அன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணப்பாளர் சோனல் சந்திரா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 54 இரு சக்கர வாகனங்களில் 48 வாகனங்களுக்கான பொது ஏலம் வருகின்ற 26.12.2016 ஆம் தேதி திங்கள் கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 54 இரு சக்கர வாகனங்கள் பற்றி மாவட்ட அரசிதழில் 23.08.2016 அன்று வெளியிடப்பட்டது. இதுவரை மேற்படி வாகனங்களை யாரும் உரிமை கோரவில்லை. எனவே மாவட்ட வருவாய் அலுவலர், அவர்களால் மேற்படி 54 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ளது. மேற்படி வாகனங்களில் 48 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், ஏலம் நடைபெறும் நாளான 26.12.2016 அன்று காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை ரூ. 5000ஃ- முன் வைப்பு தொகை செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

காலை 11.00 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். மேலும், ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வாகனத்தை ஏலம் ஏடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 14.5 சதவீதம் விற்பனை வரி தொகையினையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!