In Perambalur at the seminar on women’s rights
வி.களத்தூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் பெண்களின் உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் அருகே உள்ள அகரம் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் பெண்களின் உரிமைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கை பள்ளியின் தாளாளர் குணசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமையாசிரியர் பிரவீனா, ரோவர் கல்லூரி சமூக பணித்துறை தலைவர் சுமதி, பேராசிரியை கீதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கருத்தரங்கில் வழக்கறிஞர் செந்தில்நாதன் கலந்துகொண்டு பெண்களின் உரிமைகள் குறித்த சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னதாக ரோவர் சமூகப்பணித்துறை மாணவர் சந்தோஷ்குமார் வரவேற்று பேசினார். முடிவில் மாணவி கெத்சி நன்றி கூறினார்.