In Perambalur branch legal aid service center for prisoner, the District Judge has opened.
பெரம்பலூர் கிளை சிறையில் சிறை கைதிகளுக்கான சட்ட சேவை மையம் : மாவட்டநீதிபதி திறந்து வைத்தார்.
பெரம்பலூர் கிளை சிறையில் சிறை கைதிகளுக்கான சட்ட சேவை மையத்தை மாவட்டநீதிபதி திறந்துவைத்தார்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரம்பலூர் கிளை சிறைச் சாலையில் சிறை கைதிகளுக்கான சட்ட சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் தொடக்கவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.
சட்டம சேவை மையத்தை மாவட்ட முதன்மை அமா;வு நீதிபதி நசீமாபானு திறந்துவைத்து, வழக்குகளை நடத்த இயலாத நிலையில் உள்ள சிறைக் கைதிகளிடம் இலவச சட்டசேவையை எடுத்து கூறி அவர்களுக்கு இலவச சட்ட உதவி அளிக்கப்படும் என்றும், ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சமூக சட்ட ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிறைக் கைதிகளை சந்தித்து அவர்களுக்கு சட்ட உதவி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சிறைவளாகத்தில் உள்ள சமையல்கூடம், கைதிகள் இருக்கும் சிறை அறைகள் ஆகிவற்றை மாவட்ட நீதிபதி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சுஜாதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரவர்மா, கிளை சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், மற்றும் சமூக சட்ட ஆர்வலர்கள் நடராஜ், தனராஜ், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.