in Perambalur could not bear the grief at the death of Chief Minister Jayalalithaa’s AIADMK volunteer suicide!

hotel-master-perambalur-sucied பெரம்பலூர் அருகே அதிமுக தொண்டர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதா இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(55). அதிமுகவின் தீவிர தொண்டரான இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு ஹோட்டல் கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டதில் இருந்து, சரியாக வேலைக்கு செல்லாமல், ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது குறித்து வீட்டில் உள்ளவர்களிடமும், நண்பர்களிடமும் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானவுடன், அழுது கொண்டே சாப்பிடாமல் இருந்துள்ளார், இனி உயிருடன் இருந்து என்ன செய்ய போகிறேன், நான் இறந்து விடுகிறேன் என்று கூறி புலம்பிக் கொண்டே இருந்துள்ளார். அதற்கு வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஜெயலலிதா இறந்து போனதாக அதிகார பூர்வமாக வெளியான பின்னர், சோகதத்துடன் யாரிடமும் பேசாமல் வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். வழக்கம் போல தூங்குவதற்காக செல்கிறார் என்று வீட்டில் உள்ளவர்கள் இருந்த நிலையில் இன்று காலை எழுந்து பார்த்த போது, வீட்டில் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த விஷத்தை குடித்து, இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து ராமச்சந்திரனின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசாதனைக்கான அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!