In Perambalur district, 12,004 persons are write the TET exam || பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேரவினை 12,004 நபர்கள் எழுத உள்ளனர்

முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய இரு நாட்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. 29.04.2017 அன்று நடைபெறும் முதல் தாள் தகுதித் தேர்வினை 7 தேர்வு மையங்களில் 2,913 தேர்வர்களும், 30.04.2017 அன்று நடைபெறும் இரண்டாம் தாளுக்கான தகுதித் தேர்வினை 23 மையங்களில் 9,091 தேர்வர்களும் எழுதவுள்ளனர்.

முதல் தாள் தேர்வு நடைபெறும் நாளான 29.4.2017 அன்று தேர்வுப் பணிக்கென 7 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 7 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 7 துறை அலுவலர்கள் மற்றும் 9 கூடுதல் துறை அலுவலர்களும், 153 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், இரண்டாம் தாளுக்கான தேர்வு நாளான 30.4.2017 அன்று தேர்வுப் பணிக்கென 23 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 23, கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 23 துறை அலுவலர்கள் மற்றும் 26 கூடுதல் துறை அலுவலர்களும், 478 அறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

35 பார்வையற்றோருக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுப் பணியினை முதன்மைக் கல்வி அலுவலருடன் இணைந்து மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் வட்டார ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் பறக்கும்படை பணியில் ஈடுபடுகின்றனர்.

தேர்வு நாளன்று ஒவ்வொரு மையத்திலும், தேர்வுப் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும் காலை 8.00 மணிக்கு அந்தந்த மைய முதன்மைக் கண்காணிப்பபாளர்களால் கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்படும்.

தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் அந்தந்த மையத்திற்கு செல்ல வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் கருப்பு அல்லது நீல பந்து முனை பேனாக்கள் தவிர வேறு எதுவும் தேர்வுக் கூடத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

கைப்பேசிக்கென தேர்வு மையத்தில் தனியாக அறை எதுவும் ஒதுக்கப்படாது. எனவே, தேர்வர்கள் கைபேசி கண்டிப்பாக கொண்டு வரக்கூடாது. தேர்வறைக்குள் கைபேசி, கைகணினி, பேஐர், டேப்லெட் அனுமதிக்கப்பட மாட்டாது.

தேர்வறையில் முறைதவறி நடப்பவர், குற்றம் அல்லது ஒழுங்கீன செயலில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!