In Perambalur district that wishes to apply for the vacant assistant village
jobs
பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க. நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 வருவாய் கிராமங்களில் காலியாகவுள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.3500 – 6000 தரஊதியம் ரூ.800 என்ற ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து ஊதியம் வழங்கப்படும்.

அதன்படி பெரம்பலூர் வட்டம் கல்பாடி(வ) கிராம உதவியாளர் பணியிடத்திற்கு கல்பாடி (தெ), கல்பாடி (வ), அயிலூர், சிறுவாசசூர், நொச்சியம், துரைமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுப்பிரிவு முன்னுரிமையற்றவர் (பெண்கள்) வகுப்பை சார்ந்தவர்களும்,

பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் (கி) கிராம உதவியாளர் பணியிடத்திற்கு மேலப்புலியூர் (கி), மேலப்புலியூர் (மே), குரும்பலூர் (வ), குரும்பலூர்(தெ), லாடபுரம் (கி), லாடபுரம்(மே) உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை (பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் தவிர, (முன்னுரிமையற்றவர்) (பெண்கள்) சார்ந்தவர்களும்,

வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு பிரம்மதேசம், மேட்டுப்பாளையம்(தெ), மேட்டுப்பாளையம்(வ), வாலிகண்டபுரம், அனுக்கூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை (முன்னுரிமை அற்றவர்) சார்ந்தவர்களும்,

வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வாலிகண்டபுரம் தேவையூர்(வ), தேவையூர்(தெ), மேட்டுப்பாளையம்(தெ), மேட்டுப்பாளையம்(வ), உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பட்டியல் இனத்தவர் வகுப்பை (முன்னுரிமை அற்றவர்) சார்ந்தவர்களும்,

குன்னம் வட்டம் ஓலைப்பாடி(கி), கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ஓலைப்பாடி(கி), ஓலைப்பாடி(மே), வயலப்பாடி, துங்கபுரம்(தெ), துங்கபுரம்(வ), கிழுமத்தூh;(வ), கிழுமத்தூர் (தெ) உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது இனத்தை சார்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிகளுக்கு 5 ஆம் வகுப்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குறைந்தப்பட்சமாக -18 வயது நிரம்பி இருப்பதுடன், அதிகபட்சமாக பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவ – தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் -35 வயது மிகாமலும் பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் -32 வயது மிகாமலும், பொதுப்பிரிவினர் -30 வயது மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிய வேண்டும். நன்னடத்தை சான்று மற்றும் உடல் தகுதிசான்று இன்றைய நிலையில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளுடைய நபர்கள் அதற்கான விண்ணப்பங்களை தொடர்புடைய பெரம்பலூர், வேப்பந்தட்டை மற்றும் குன்னம் வட்டாட்சியர் அலுவலகங்களில் வள்ளைத் தாளில் விண்ணப்பத்துடன் சான்றுகளின் நகல் (ஜெராக்ஸ்) இரண்டு பிரதிகளில் (சான்றொப்பம் இடப்பட்டது) ஆகியவற்றுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 31.01.2017 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணபிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக தொலைபெசி எண் 04328-277201, வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலக தொலைபெசி எண் 04328-264201, குன்னம் வட்டாட்சியர் அலுவலக தொலைபெசி எண் 04328-258370 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!