In Perambalur district, the extreme health movement to clean up tasks on behalf of a municipality in the valikantapuram
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்ப்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் தீவிர சுகாதார இயக்கத்தின் சார்பில் குப்பைகள் அகற்றும் பணிகள் தீவிர இயக்கமாக (Mission Mode) இன்று (29.08.16) முதல் 02.09.16 வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் ஊராட்சிப்பகுதிளிலுள்ள அனைத்து சாலைகள், தெருக்கள், வீடுகள் மற்றும் கட்டிடப்பகுதிகளிலுள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட உள்ளன. மேலும் மேல்நிலை மற்றும் தரைமட்ட குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு, குளோரினேசன் செய்யப்பட்டு சுகாதராரமான குடிநீர; கிடைக்க வழிவகை செய்யதல், கொசுப்புழு பெருவாரியான அளவில் உருவாதற்கு காரணமான உடைந்த பானைகள், பயன்படுத்தப்பட்ட டயர;கள், தேங்காய் சிரட்டைகள் முதலியவற்றை முழுமையான அளவில் அகற்றி தண்ணீர் தேங்குவதையும், கொசுக்கள் உற்பத்தியாவதை தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், தீவிர சுகாதார பணியின் பொழுது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் டெங்கு உள்ளிட்ட நோய் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்குட்ப்பட்ட குக்கிராமங்களிலும் ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதாரத்துறைச் சார்ந்த அலுவலரை அணித்தலைவராக கொண்டு அனைத்து குக்கிராமங்களிலும் குப்பைகள் அகற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளன.
வாலிகண்டபுரம் ஊராட்சியில் நடைபெற்ற துய்மைப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.சிவராமன் துவக்கி வைத்து தெரிவித்ததாவது:
மழைக் காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த கிராமப் புறங்களில் கொசுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் இல்லங்கள் மற்றும் சுற்றுப்பறுங்களை துய்மையாக வைப்பதுடன், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பை அகற்றும் பணிகள், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், மேல்நிலைத்தொட்டிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி, துய்மையான சுற்றுப்பறங்களை ஏற்படுத்த பொதுமக்கள் அவைரும் முன்வர வேண்டும், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அவினாசிலிங்கம், வேப்பந்தட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் அரவிந்தன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி, வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி சுந்தரி, ஊராட்சி மன்ற தலைவர் இரவிசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.