In Perambalur education district-level athletic competitions
பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சுந்தரராஜு தொடங்கி வைத்தார்.
குன்னம் மற்றும் பெரம்பலூர் குறுவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கான, பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலாள தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளை பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சுந்தரராஜு தொடங்கி வைத்தார்.
போட்டிகளில் 5000மீ ஓட்டம், கோலூன்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீ, 200 மீ, 400 மீ, 600 மீ, 800 மீ, குண்டு எறிதல், 80 மீ தடை ஓட்டம், 100 மீ தடை ஓட்டம், 110 மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதல் மும்முறை தாண்டுதல் மற்றும் 1500 மீ ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மொத்தம் 660 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ – மாணவியர்கள் நவம்பர் மாதம் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்குபெற தகுதி பெறுகின்றனர்.
நடைபெறும் தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவியருக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் இல.வெங்கடாசலபதி கலந்துகொண்டு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்க உள்ளார்கள்.