In Perambalur elderly woman in the well near the corpse: the farmer lodged a police complaint
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூரிலிருந்து அய்யனார்பாளையம் செல்லும் சாலையின் அருகே வசிப் விவசாயி பன்னீர்செல்வம். இவரது விவசாய கிணற்றில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக மிதந்துள்ளார். இதனை பார்த்த பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்தார். பின்னர், கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கை.களத்தூர் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? நகைக்காக அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது என்ன காரணங்கள் என்ற கோணங்களில் கை.களத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.