In Perambalur, Kalaignar100! Centenary Celebration; District DMK in-charge V. Jagatheesan’s statement!
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு பெருவிழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில்,16.07.2024 (செவ்வாய்க்கிழமை), காலை 10.00 மணியளவில், பெரம்பலூர் to அரியலூர் சாலையில் உள்ள, பூமணம் திருமண மண்டபத்தில், மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன் தலைமையில், பெரம்பலூர் நகரக் கழகச் செயலாளர் எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ., வரவேற்புரையில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர் – மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி., – போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் – கே.என்.அருண்நேரு.எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் நன்றியுரையாற்றுகிறார். அதேபோல் பெரம்பலூர் ஒன்றிய தி.மு.க.சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் லக்ஷ்மன் ஸ்ருதி இன்னிசைக் கச்சேரியுடன் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்,16.07.2024 செவ்வாய்க்கிழமை,மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என அதில் தெரிவித்துள்ளார்.