In Perambalur near 60 sovereing of jewelery, 1 kg silver robbery
பெரம்பலூர் அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமரகுருபன்(வயது 65), ஓய்வு தலைமை ஆசிரியரான அவர் உறவினரை காண வெளிநாடு சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளிருந்த 60 பவுன் தங்க நகை மற்றும் 1 கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளையர்கள் எடுத்து தப்பி சென்றது தெரிய வந்தது.
ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதியில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து குமரகுருபனின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில், பெரம்பலூர் டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ஆளில்லா வீட்டை குறித்து வைத்து திருடும் கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.