In Perambalur peace rally in the student organization seeking permission Jallikattu

Peramalur-youngers-silent-rally-jan13_1

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற ஒருமித்தகோரிக்கை வலுத்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர்மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறுபோராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், உடனடியாகஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், பாரம்பரிய விளையாட்டு உரிமையைமீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரம்பலூரில் இளைஞர்கள் மற்றும்மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டு மீட்புக்குழுவின் சார்பில் அமைதி பேரணிநடைபெற்றது.

பேரணியில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்தஅனுமதி வழங்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றுவலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் ஏராளமான மாணவர்கள்மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒருசில கிராமங்களில்மட்டுமே நடத்தப்படும் என்ற போதிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டானஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏராளமானோர் தாமாக முன்வந்து இந்த பேரணியில்கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கியவீதிகள் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தை சென்ற டைந்தது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!