In Perambalur, real estate collapsed due to the greed of landowners! No one to buy!!
தமிழ்நாட்டில், பெரம்பலூர் வளர்ந்து வரும் ஒரு சிறிய மாவட்டம். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் வழியாக செல்வதால், புதிய நகரமாக வளர்ச்சி அடைந்து வந்ததால், புதிய குடியிருப்புகள் உருவாகின, உருவாக்கப்பட்டது.
பல ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் பிளாட்டுகள் போடப்பட்டு விற்பனை செய்தில் பலர் கோடிஸ்வர்கள் ஆனார்கள், பல தொழில் செய்தவர்களும், பகுதி நேரமாக தரகர்களாக செயல்பட்டு லட்சாபதிகளாகவும் கோடிஸ்வரர்களாகவும், ஆனார்கள், திருச்சி மண்டலத்தில், பெரம்பலூர் திருச்சியின் நுழைவு வாயிலாக இருப்பதால் அசுர வளர்ச்சி இருக்கும் என எண்ணி நிலங்கள் வாங்கி குவிக்கப்பட்டது. அதில் பிளாட்டுகள் போடப்பட்டு, பணம் சுழற்சியும், மக்களின் வளர்ச்சியும் அதிகாித்தது.
மேலும், சூதாட்டம் போல், தொழில் தர்மம் இல்லாமல் அதிக ஆசை கொண்ட ரீ-சேல் பார்ட்டிகளால் விலை கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டதால், வாங்குபர்கள் யோசிக்கத் தொடங்கினர். வறட்சி ஏற்பட்டால் கருமண்ணானது பாலம்பாலமாக பெரிய வெடிப்புகள் ஏற்படும். தண்ணீர் இல்லாத இந்த வறண்ட பூமிக்கு இவ்வளவு விலையா? ஒரு செண்ட் 10 லட்சம் முதல் 50 லட்சமா? இதற்கு பேசாமல் சவுதி அரேபியாவிலோ, அல்லது கோலார் தங்க சுரங்கத்திற்கு அருகிலேயே இடம் வாங்கிவிடலாம் போல என எண்ணியர்வர்கள், தற்போது பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாங்குவதை நிறுத்தினர்.
இதனால், ரியல் எஸ்டேட் பூம் ஆகி வந்த நிலையில் புறக்கணிப்பால் நிலங்கும் தொழில் முடங்கி உள்ளது. ஏற்கனவே, அரசு பல விதிமுறைகளை விதித்ததாலும், பத்திரப்பதிவு மற்றும் அங்கீகாரம் போன்றவற்றால் தற்போது பேராசையால் நில உரிமையாளர் அளவிற்கு அதிகமாக விலைகூறியதால் நிலம் மற்றும் பிளாட்டுகளில் முதலீடு செய்வோர்கள் தங்கம் உள்ளிட்ட வேறு திசைகளுக்கு சென்று கொண்டு உள்ளனர்.
பெரம்பலூரில் ஏழைகள் நிலம் வாங்கும் அளவிற்கு இல்லாததால், பலர் கிராமங்களை நோக்கி படைஎடுத்துள்ளனர். மேலும், தற்போது பெரம்பலூரில் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விலை கேட்பாரின்றி நிலங்கள் உள்ளதால், ரீ-சேல் பார்ட்டிகள் பலர் முடக்கத்தில் உள்ளனர்.
நில உரிமையாளர்ளின் பேரசையால் பெரிய தொழில் வளர்ச்சி இல்லாத பெரம்பலூரில் ரியல் எஸ்டேட் தொழிலும் தற்போது முடங்கி இருப்பதது, இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் அரசுக்கும் சற்று வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் நியாயமான விலைக்கு விற்க முன்வந்தால் மட்டுமே மீண்டும் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி பெறும்.