In Perambalur the public to protest the federal government’s own money, not with ink, demonstrating the CPI.
பெரம்பலூர் : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொது மக்கள் படும் அவதியை கண்டித்தும் புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் வரை செல்லும் என அறிவிக்கக் கோரி தேசம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, பி.ரமேஷ், எ.கலையரசி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். வேப்பந்தட்டை வட்ட செயலாளர் சுபா.தங்கராசு, மற்றும் மாவட்டக்குழு எ.கணேசன், இராஜகுமாரன் வட்டக்குழு எஸ்அகஸ்டின், பி;முத்துசாமி, பி.கிருஷ்ணசாமி வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.டி.ராஜாங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.