In Perambalur, the snake does not bite medicine: injured persons tragedy of dying!

anti-snake-venom

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால், பாம்பு கடிக்கு போதுமான மருந்துகளும் வசதிகளும் இல்லாத காரணத்தில் கடிபட்டவர்கள் சிகிச்சை பெற வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்றும் இறக்கும் அவல நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பாம்பு தீண்டியதால், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குன்னம் வட்டம் இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மனைவி மேகவதி (வயது 26) இவர் கடந்த செப். 6ம் தேதி தனது வீட்டின் பின் புறத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் மாட்டிற்கு தீனி போடுவதற்காக இரவு நேரத்தில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு மேகவதியை விஷ பாம்பு தீண்டியது. மேகவதி அலறினார், அவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பெற்று வந்த மேகவதி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செந்தில்குமார் குன்னம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த போன மேகவதிக்கு இனியவன் ( வயது5) பிரபாகரன் (வயது2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விவசாய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில், பாம்பு கடி பட்டவர்கள் பிழைக்க முடியாத அவல நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாம்பு கடிக்கு பயன்படுத்தப்படும் anti snake venom என்ற மருந்தை குளிர் நிலையில் பாதுகாப்பு செய்வதுடன், பாம்பு கடிக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக சிறுநீரகம் உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும், அதை செய்யும் தடுத்து நிறுத்தும் அளவில் போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லை என்பதால் பாம்பு கடிப்பட்டவர்கள் காப்பாற்றும் நிலை பெரும் கவலைக்கு உள்ளதாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு சிலவற்றில் மட்டும், சேவைக்கருதி மருந்தை பாதுகாத்து வருகின்றனர்.

பெரம்பலூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், செலவினத்தை கருதாது நாட்டின் முதுகெலும்பாகிய உழவர்களின் உயிரை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும், அலட்சிய போக்கை கை போக்கை பெரம்பலூர் மற்றும் கிராம புற தனியார் மருத்துவமனைகளுக்கு மருந்துகளை இலவசமாக தர முன்வரவேண்டும், இதனால், மேலும், பல விவசாய மற்றும், விவசாய தொழில் சார்ந்த தொழிலாளார்களும், அவர்களது குடும்பத்தினரும் காப்பாற்றப் படுவார்கள், எனவே, பல லட்ச ரூபாய் பணத்தை கமிசனாகவோ, பொய் கணக்கு எழுதி எடுத்து கொள்ளும், பல திட்டங்களில் பணம் வீணாக விர செய்யும் அரசு பொதுமக்களின் உயிரை காக்கும் மருந்தை இலவச தர முன் வரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

கடந்த சில ஆண்டுகளாக பாம்பு பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது பாம்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!