In Perambalur the truck suddenly caught fire near the National Highway Traffic Impact blaze
lorry-caught-fire-perambalur-near
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிளிஞ்சகள் ஏற்றிச்சென்ற லாரி திடீரென தீ பிடித்ததில் லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது.

அரியலூரில் இருந்து பெங்களூர் நோக்கி இன்று மாலை லாரி ஒன்று சிமென்ட் மற்றும் பீங்கான் தயாரிக்கப் பயன்படும் கிளிஞ்சல் கற்களை ஏற்றிக்கொண்டு, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் சென்று கொண்டிருந்தது, லாரியை திருவண்ணாமலை மாவட்டம் மலையனூர் செக்கடியை சேர்ந்த டிரைவர் குமார்(32) ஓட்டினார், அவருடன் அதே பகுதியை சேர்ந்த கிளினர் ஜெய்கண்ணு (20) உடன் சென்றார். அப்போது லாரி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. லாரி தீப்பற்றியது தெரிந்தவுடன் லாரியின் டிரைவரும் கிளினரும் லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி தப்பித்தனர். அதற்குள் லாரி மள மளவென வேகமாக எரியத் தொடங்கியது. இது குறித்து பெரம்பலூர் தீயனைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த தீயனைப்பு வீரர்கள் லாரியில் பற்றிய தீயை அனைத்தனர். அதற்குள் லாரியின் பெரும்பகுதி எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!