In Perambalur, the VAO wife of the suspect’s death
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருநகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 32), இவர் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அவரது மனைவி சகிலா (வயது 29) வீட்டினுள் மர்மான முறையில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகிலாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சகிலா வீட்டில் தூக்கில் தொங்கிய போது கதவு தாள்பாள் உட்பக்கமாக போடப்படாமல் இருந்தது. மேலும், தன்சாவிற்கு யாரும் காரணம் அல்ல என்ற கடிதமும் கிடைத்துள்ளது. கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சகிலாவுக்கு தன்சிகா என்ற 6 வயது மகளும் உள்ளார்.