In Perambalur, World Environment Day: Celebrated on behalf of the Hope Charity Trust
உலக சுற்றுசூழல் தினம், பெரம்பலூரில், கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஹோப் தொண்டு நிறுவனத்தின் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் போலீஸ் டி.எஸ்.பி சஞ்சீவ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் காதி மற்றும் கிராம தொழிற் ஆணைய ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹோப் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி மேற்கொள்ளும் சுமார் 100 மாணவிகள் கலந்து கொண்டனர் .
தொண்டு நிறுவன தலைவர் தினேஷ் தலைமையுரை ஆற்றினார். சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்த டி.எஸ்.பி. சஞ்சீவ்குமார் மாணவ – மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
பெரம்பலூர் போலீஸ் டி.எஸ்.பி சஞ்சீவ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தொண்டு நிறுவன வளாகத்தினுள் மரக் கன்றுகளை நட்டனர் . பின்னர் விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி சஞ்சீவ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொண்டு நிறுவனத்தின் நிதி அறங்காவலர் வினுசக்கரவர்த்தி நன்றி கூறினார்.