In the parliamentary election tomorrow, the AIADMK has the power of determining India’s prime minister: MP. Vaithylingam
நாளை நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்திய பிரதமரை நிர்ணயிக்கும் சக்தி அதிமுகவிற்குதான் உண்டு என அஇஅதிமுக வின், துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கம், பேசினார்.
பெரம்பலூரில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பணி மற்றும் பூத் கமிட்ட அமைப்பது குறித்த செயல்வீரர்கள் கூட்டம், துறைமங்கலத்தில் தனியார் திருமண மண்டபத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்திற்கு மாவட்டஅவை தலைவர் துரை தலைமை விகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, சுரேஷ், நகர செயலாளர் ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணி, பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை நடந்தது.
மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், முன்னாள் துணைசபாநாயகர் அருணாசலம் உட்பட பலர் பேசினர்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் பேசியதாவது:
தமிழகம் அதிமுகவின் எக்கு கோட்டை, யாராலும் அசைக்கமுடியாது, எம்ஜிஆரால் அதிமுக துவக்கப்பட்டபோது 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். பின்னர் ஜெயலலிதா தலைமையில் 1.50 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர். இந்த உறுப்பினர்கள் அனைவரும் அதிமுகவின் வேர்களாக உள்ளனர்.
இப்போதே பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் நாம் தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். ஜெயலலிதா காட்டிய வழியில் தற்போதும் சிறப்பாக ஆட்சி நடக்கிறது. தொண்டர்கள்தான் நமது இயக்கத்தின் பலம். கடைக்கோடி தொண்டனும் அமைச்சர்களாக, மாவட்ட செயலராக வர முடிகிற ஒரே இயக்கம் அதிமுக தான்.
திமுக, அதிமுக பல தேர்தலில்களில் கூட்டணி போட்டுத்தான் வெற்றிப் பெற்றுள்ளது. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு தனித்து பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிட்டு 40 இடங்களில் 37 இடங்களை பிடித்தார். அதே போல் கடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 134 இடங்களை பிடித்தார். 60க்கு மேற்பட்ட தொகுதிகளில் மிகசொற்ப ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியை சந்தித்தது.
கிராமங்கள் தோறும் 5 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அதில் செயல்படும் கட்சியினரை மட்டுமே மூத்த முன்னோடிகளின் வழிகாட்டுதலோடு உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். 50 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதியை என நியமிக்கவேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தல் வியூகம் வகுத்து சிறப்பாக செயல்பட்டு அதிமுக வெற்றிபெற அனைவரும் முழுமையாக பாடுபடவேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்லில் இந்திய பிரதமரை நிர்ணயிக்கும் சக்தி அதிமுக-விற்குதான் உண்டு. தமிழகத்தில் ஆயிரம் ரஜினி, கமல், தினகரன் வந்தாலும் அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. ஜெயலலிதா எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும், இந்த இயக்கத்தை யாரும் சாதாரணமாக எடை போட முடியாது. புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோர மனதில் வைத்து , எதையும் எதிர்ப்பார்க்காமல் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர், என பேசினார். கடந்த 2014 போன்று பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் தொகுதி மீண்டும் அதிமுக வெற்றி பெறும்ன பேசினார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் பூவைசெழியன், ராஜாராம், ராஜேஸ்வரி, தேவராஜன், முத்தமிழ்ச்செல்வன், ரமேஷ், பேரூர் செயலாளர்கள் செல்வராஜ், வினோத், ரெங்கராஜ் மற்றும் வெண்மணி காமராஜ், குன்னம் குணசீலம், எசனை, அசோகன், பன்னீர்செல்வம், கீழக்கரை பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட இணை செயலாளர் ராணி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் லட்சுமி நன்றி கூறினார். முன்னதாக குன்னத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கத்திற்கு சிறப்பான முறையில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
படவிளக்கம்: பெரம்பலூரில் நடந்த மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் பேசுகிறார். அருகில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்எல்ஏ தமிழ்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம் ஆகியோர் உள்ளனர்.