2017-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைகாவலர் சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்துதேர்வு 3685 விண்ணப்பதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் இன்று காலை 10.00 மணிமுதல் 11.20 மணிவரை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி, துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரால் தேர்வுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு அழைப்பு கடிதம் பெற்ற மொத்தம் 3885 விண்ணப்பதாரர்களில், 2841 விண்ணப்பதாரர்கள் (2434-ஆண், 407- பெண்) தேர்வு எழுதினர். விண்ணப்பதாரர்கள் (712-ஆண், 132-பெண்) 844 பேர் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
தேர்வு முடிந்தவுடன் சேகரிக்கப்பட்ட விடைத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பு முத்திரையிடப்பட்ட பெட்டிகளில் ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்புடன் வழிக்காவல் செய்யப்பட்டு சென்னையிலுள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டது.