In the perambalur district panguni Uttara car festival

பங்குனி உத்திர தேரோட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்
பெரம்பலூர் மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிக்குளம், தொண்டைமாந்துறை, பெரம்பலூர், எசனை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா மார்ச் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி- தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, மேற்கொள்ளப்பட்டு காலை 8 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். தேரோட்டம் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497