In the traditional food festival melamattur In Perambalur: MLA RT Ramachandran inaugurated .

RTR-mla-kunnamபெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஒன்றிய அளவிலான பாரம்பரிய உணவுத்திருவிழா ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மேலமாத்தூர் ஊராட்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர;.டி.ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஒன்றிய அளவிலான பாரம்பரிய உணவுத்திருவிழா இன்று ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட மேலமாத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வரகு, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட பல பாரம்பரிய உணவு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள், காய்கறிகளின் விதைகள், உணவு தானியங்கள் மற்றும் முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்திய அடுப்பு, தானிய அரவை இயந்திரங்கள், தானியங்களை அளவிடும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழச்சியில் பாரம்பரிய உணவுகளின் கண்காட்சியினை திறந்து வைத்து குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் பேசியதாவது:

நம் மூதாதையர்கள் காலத்தில் நாம் எவற்றையெல்லாம் அரியவகை உணவுப் பொருட்களாக பார்த்தோமோ அவை அனைத்தும் இன்று நமது வாழ்க்கையின் அன்றாட உணவுப்பொருட்களாக மாறி விட்டன. மேலும் நமது நமது முன்னோர்கள்; பயன்படுத்தி வந்த பல்வேறு சத்தான உணவுப்பொருட்கள் இன்று காட்சிப்பொருட்களாக மாறிவிட்டன.

இவ்வாறு சத்துள்ள தானியங்கள் மற்றும் உணவுப்பொருட்களை எல்லாம் நமது இன்றைய கால தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் அறிந்து அவற்றின் பயன்களை தெரிந்து கொண்டு, சத்துள்ள உணவுப்பொருட்களின் பயன்பாடுகளால் நமது உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பாராம்பரிய உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. எனவே, இன்றைய கால இளைஞர்கள் நமது பாரம்பரிய உணவு வகைகளை தெரிந்து கொள்வதுடன், அவ்வகை உணவுப்பொருட்களை பயன்படுத்தவும் முன்வர வேண்டும், என பேசினார்.

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறையின் சார்பில் பாரம்பரிய தானியங்கள் மூலம் உணவுப்பொருட்களை தயாரிக்கும் முறை குறித்த கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பொதுமக்கள் அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!